பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும், இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே! (2) pachchai mAmalai pOl mEni pavaLavAy kamalach-chengkaN achchudA! amarar-ERE! Ayar tam kozhundE! ennum, ichchuvai tavira yAn pOy indira lOkam ALum achchuvai peRinum vENDEn aranga mA nagar-uLAnE! ‘O Achyuta! With a body like a great green mountain, a mouth like coral, with eyes shaped like a red lotus, O Lord of the celestials! O tender sprig of the cowherds!’ Other than the pleasure of uttering these words, I want nothing, not even the experience of ruling the world of the celestials, O Lord who lives in the great city of Arangama (SriRangam)! ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே (29) UrilEn kANI illai uRavu maTRRovar illai pAril nin pAda mUlam paTRRilEn parama mUrtti kAroLi vaNNanE en kaNNane kadaRuginDREn Ar uLar kaLaikaN ammA aranga mA nagaruLAnE O Supreme Lord, I am of no town, I have no land, I have no other kin in this world. I have not even been able to access your feet! O Lord with the complexion of brightly lit clouds! O my Kanna (Krishna)! I cry in despair! Who is there to be support me like a mother! O Ranganatha!